டெல்லியில் கொடூரம் : நடக்க முடியாமல் இருந்த மாமியாரை குக்கரால் அடித்துக் கொன்ற மருமகள்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் கொடூரம் : நடக்க முடியாமல் இருந்த மாமியாரை குக்கரால் அடித்துக் கொன்ற மருமகள்.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுர்ஜித் சோம்-சுர்மிஷ்தா தம்படியினர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்களுடன் சுர்ஜித் சோமின் தாயார் ஹசி சோம் என்பவரும் வசித்து வந்தார். இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு நடக்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே ஹிசி சோமிற்கும், மருமகள் சுர்மிஷ்தாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஹசிம் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி அவரது அறையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைப்பார்த்த சுர்ஜித் சோம் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். 

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹசி சோம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மருமகள் சர்மிஷ்தா ஹசி சோமை குக்கரால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சா்மிஷ்தாவை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter in law kill mother in law in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->