தந்தையை கோடாரியால் கொன்ற மகள்...! காரணம் என்ன?
daughter killed her father with an axe
ஜஷ்பூர் பாக்பஹார் காவல் நிலையப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் 50 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு, தனது வீட்டில் கோடரியால் தலையில் தாக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

அவரின் 15 வயது மகள் பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று அழுதுகொண்டே, தனது தந்தையை யாரோ கொன்றுவிட்டதாகவும், அவரது தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தாள்.
இந்தத் தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர். இதில், சிறுமியின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த காவலர்கள், தாயின் முன்னிலையில் சிறுமியை விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டுள்ளது.
சிறுமியின் வாக்குமூலம்:
மேலும், சிறுமியின் வாக்குமூலத்தின்படி, தந்தை தினமும் மது போதையில் சிறுமியையும், தாயாரையும் அடித்து துன்புறுத்தியுள்ளது தெரிய வந்தது.இதில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி, தாய் வெளியே சென்றிருந்த நிலையில் இரவு 9 மணியளவில் குடிபோதையில் வீடு திரும்பிய தந்தை சிறுமியை அடிக்கத் தொடங்கினார்.
இதனால் கோபத்தில், வீட்டில் வைத்திருந்த கோடரியால் தனது தந்தையின் தலையில் சிறுமி தாக்கியதன் விளைவாக அவர் இறந்து விட்டதாக தெரியாதுள்ளது.இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று (வியாழக்கிழமை) சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.இச்சம்பவம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர்
English Summary
daughter killed her father with an axe