பரபரப்பு: ஓட்டலில் வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த எலி! வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரபல தனியார் ஓட்டலில் தோசை உடன் வழங்கப்பட்ட சாம்பாரில் இறந்த எலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், பல்வேறு உணவகங்களில் கரப்பாம்பூச்சி மற்றும் இறந்த பாம்பு போன்றவர்கள் இருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம்  அகமதாபாத்தை சேர்ந்தவர். அபினேஷ்-தேவயானி தம்பதியர் அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். 

இருவரும் சாப்பிடுவதற்காக தோசை ஆர்டர் செய்துள்ளனர். ஹோட்டலில் வழங்கப்பட்ட தோசை உடன் வழங்கப்பட்ட சாம்பரில் ஒரு இறந்த எலி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த தம்பதியினர் மாநகராட்சி அதிகாரிகளிடமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் ஓட்டலுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் அந்த உணவகத்தை அதிகாரிகள் சீல் வைத்து மூடிய சம்பவம் அப்போதில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dead rat in the sambar served at the restaurant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->