மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு..!!
Dearness allowance increasing for central govt employees
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். கடந்த ஆறு மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட உள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 31 ஆம் தேதி மத்திய தொழிலாளர் அமைச்சகமானது அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை வெளியிட உள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் 132.5 ஆக இருந்த நிலையில் இந்த மாதமும் ஒரே மாதிரியான குறியீட்டு எண் நீடித்தால் 3% அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 41 சதவீதமாக உயர்த்தப்படும்.
அவ்வாறு உயர்த்தப்பட்டால் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாய் வழங்கும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 10,800 ரூபாய் சம்பளம் உயர்வும், அதேபோன்று அதிகபட்ச சம்பளம் 56,900 ரூபாய் வாங்கும் அரசு ஊழியருக்கு 20,000 ரூபாய் வரையும் சம்பளம் உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Dearness allowance increasing for central govt employees