டிசம்பர் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!
December month 13 days holiday for ban reserve Bank of India announced
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது விடுமுறை நாட்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் சார்ந்த பண்டிகைகள், மத விடுமுறைகள் மற்றும் பொது பண்டிகைகள் இந்த வகைகளின் கீழ் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்கள்;
டிசம்பர் 3 - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவா)
டிசம்பர் 4 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 10 - 2வது சனிக்கிழமை
டிசம்பர் 11 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 12 - திங்கட்கிழமை -பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)
டிசம்பர் 18 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 19 - திங்கட்கிழமை -கோவா விடுதலை நாள் (கோவா)
24 டிசம்பர் - சனிக்கிழமை - கிறிஸ்துமஸ் விழா & நான்காவது சனிக்கிழமை
டிசம்பர் 25 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 26 - திங்கட்கிழமை - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்/லோசூங்/நம்சூங் (மிசோரம், சிக்கிம், மேகாலயா)
டிசம்பர் 29 - வியாழன் - குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் (சண்டிகர்)
டிசம்பர் 30 வெள்ளி - யு கியாங் நங்பா (மேகாலயா)
டிசம்பர் 31 - சனிக்கிழமை - புத்தாண்டு விழா (மிசோரம்)
விடுமுறை பட்டியலில் உள்ள நாட்களில், உங்கள் மாநிலம் அல்லது பகுதி சார்ந்த விடுமுறையாக அது வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் வரும் விடுமுறைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது என்பதையும், அனைத்து வங்கி நிறுவனங்களும் ஒரே மாதிரியான விடுமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
English Summary
December month 13 days holiday for ban reserve Bank of India announced