தேர்தல் முடிவு எதிரொலி! பாஜகவின் ஆணிவேர் மாற்றம்! அடுத்த தளவாய் இவர்தான்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழந்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக, வட மாநிலங்களில் பெரும் சரிவை சந்தித்தது. 

அதே சமயத்தில் தென் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பாஜக இந்த முறை வசூல் செய்துள்ளது. குறிப்பாக கேரளாவில் முதல் வெற்றியும், தமிழகத்தில் தனது வாக்கு சதவிகிதத்தையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வடமாநிலங்களில் பாஜகவின் சரிவு குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா தலைமையில் இன்று டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜகவின் புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே பி நட்டாவின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடை உள்ளது.

பாஜகவின் கட்சி விதிமுறைப்படி கட்சித் தலைவரின் பதவி காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே ஜெபி நட்டாவின் பதிவு தளவும் முடிந்தது. 

இருப்பினும் மக்களவைத் தேர்தலுக்காக மேலும் ஒரு ஆண்டு பதிவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அதுவும் இந்த மாதத்துடன் அது முடிவடைகிறது. 

இதனை அடுத்து புதிய பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi BJP head change JPNadda RajnathSingh Amitshah Shivrajsingh chauhan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->