குரங்கு அம்மை நோய் : மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் - டெல்லி முதல்வர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து மேற்கு டெல்லியைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது, 

"டெல்லியில் குரங்கு அம்மை நோய்  கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. 

லோக் நாயக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை கண்காணித்துள்ளோம். மேலும், காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும் பாதுகாக்கவும் சிறந்த குழு அமைக்கப்பட்டுள்ளது". என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Chief Minister say Monkey Measles People should not panic


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->