டெல்லி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் தகுதி நீக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி ஜூன் 10-ந்தேதி விளக்கம் அளிக்குமாறு ராஜ்குமார் ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து ஜூன் 11-ந்தேதி நேரில் வந்து ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. 

அப்போதும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இருப்பினும், அவருக்கு நேற்று ஆஜராக இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஆஜராகாததால், அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ராஜ் குமார் ஆனந்த் தெரிவித்ததாவது: "தகுதி நீக்கம் குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை கேட்பேன். முழுமையான உத்தரவை பார்த்த பிறகு, சட்டபூர்வ ஆலோசனை கேட்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

ராஜ் குமார் ஆனந்த் பட்டேல் நகர் தொகுதியில் இருந்து 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi ex mla rajkumar anand disqualified in assembly membership


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->