மருத்துவமனை தீ விபத்து விவகாரம் - உரிமையாளர் கைது.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியின் கிழக்கு பகுதியில் விவேக் விகார் என்ற இடத்தில் குழந்தைகள் நல மையத்துடன் கூடிய சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நவீன வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை மூன்று மாடிகளை கொண்டதாகும்.

இந்த மருத்துவமனை கீழ் தளத்தில் நேற்று நள்ளிரவு 11.20 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், போலீசார் டெல்லி குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளரை கைது செய்தனர். மேலும், அவரிடம் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi fire accident hospital owner arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->