திமுக எம்எல்ஏ பிறந்தநாள் ஃபிளக்ஸ் & பேனர்! உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட திமுக எம்எல்ஏ பிறந்தநாள் பேனர்கள் மற்றும் ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சை: பாபநாசம் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அதில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகனின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி பகுதிகளில் பொதுச் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. 

இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பேனர்களை அகற்றக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்ற உத்தரவிட வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 

அப்போது அரசு தரப்பில், “சில இடங்களில் அனுமதி பெற்றுள்ளனர். அனுமதி இல்லாத பேனர்களை அகற்றி வழக்குப் பதிவு செய்துள்ளோம்” என வாதிடப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விதிமீறல் பேனர்கள் தொடர்பான தகவல்களைத் தாக்கல் செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Cut out case HC Order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->