கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி! டெல்லி முழுவதும் உஷார் நிலை!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள களமச்சேரியில் நடைபெற்ற கிறிஸ்தவர்களின் வருடாந்திர மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில் 36 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

சுமார் 2200 முதல் 2500 பேர் வரை கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் கேரளா முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று அண்டை மாநிலமான தமிழகத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேற்கொண்டுள்ள டெல்லி போலீசார் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் உளவுத்துறையுடன் ஒருங்கிணைந்து மக்கள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

குறிப்பாக மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், போலீசாரின் நடமாட்டத்தை அதிகரிக்க செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது. பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் டெல்லி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi is on alert due to Kerala blast


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->