டெல்லி - ஹரியானா ... தண்ணீர் பஞ்சாயத்து..! நீதிமன்றம் செல்வோம் டெல்லி எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal



ஹரியானா மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து டெல்லிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த தண்ணீர் தான் டெல்லி மாநிலத்தின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் ஆதாரமாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. எனவே குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் பெருமளவில் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தலைநகர் டெல்லியிலும் கடும் வெயில் நிலவுகிறது. இன்று 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், டெல்லியிலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் டெல்லிக்கு தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இநிலையில் டெல்லி மாநில மந்திரி அதிஷி இதுகுறித்து கூறுகையில், "டெல்லி மாநில அரசு தொடர்ந்து ஹரியானாவிடம் தண்ணீர் திறந்து விட சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறது. ஹரியானாவின் பாஜக அரசு டெல்லி அரசின் மீது வன்மத்துடன் செயல்படுகிறது.

ஓரிரு நாளில் இதில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் நாங்கள் நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று ஹரியானா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான வெப்ப அலையின் காரணமாக டெல்லி மிகப்பெரிய பிரச்னையை எதிர்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Minister Warned Haryana for not Providing Water to Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->