30 நிமிடம் பயண நேரத்தைக் குறைக்கும் டெல்லி மும்பை ரயில்கள்..! - Seithipunal
Seithipunal


தெற்கு ரயில்வே அதிகாரிகள், தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட, முக்கிய பாதைகளில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதனால், சென்னையில் இருந்து மும்பை, டில்லி விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றதனால், விரைவு ரயில்கள் நேரம் கடந்து வருவது குறைவதோடு, பயண நேரமும் குறைகிறது.

இதைத் தொடர்ந்து, தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட, முக்கிய வழித்தடங்களான ஆந்திரா மாநிலம் விஜயவாடா - கூடூர், தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் - காஜிப்பேட், ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா - குண்டக்கல் போன்ற முக்கிய ரயில் சந்திப்புகளில், ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ரயில்வே நிர்வாகம் இந்த ரயில் பாதைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்ல அனுமதி அளித்துள்ளது. இதனால், காலத் தாமதம் இன்றி பயணிகள் செல்வதோடு, பயண நேரமும் குறையும்.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது: விஜயவாடா - கூடூர், ரேணிகுண்டா - குண்டக்கல் உள்ளிட்ட ரயில் பாதைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல, நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த தடத்தில் மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது, ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், சென்னையில் இருந்து டில்லி, மும்பை செல்லும் விரைவு ரயில்கள் தாமதம் இன்றி செல்லும்.அதேபோல், 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் பயண நேரமும் குறைய வாய்ப்புகள் உள்ளன. மற்ற வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi, mumbai train save 30 minitues travel time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->