டெல்லிக்கு உண்மையான வளர்ச்சிதேவை ; போலி பிரசாரங்கள் அல்ல'.. ராகுல் காந்தி விமர்சனம்!  - Seithipunal
Seithipunal


டெல்லியை தொடச்சியாக 3 முறை ஆட்சி செய்த ஷீலா தீட்சித்தின் அரசாங்கத்தைப் போல், தற்போது டெல்லிக்கு உண்மையான வளர்ச்சி தேவைப்படுகிறது என்றும் மோடி மற்றும் கெஜ்ரிவாலின் போலியான பிரசாரங்கள் மக்களுக்கு தேவையில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.இந்தநிலையில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.மேலும்  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. அங்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில், டெல்லிக்கு தற்போது உண்மையான வளர்ச்சி தேவை என்றும், போலியான பிரசாரங்கள் தேவையில்லை என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக அவர் பேஸ்புக்கில்  வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியின் உண்மையான நிலவரம் பொதுமக்களின் கண் முன்னே உள்ளது என்றும்  மோசமான கட்டுமானம், பணவீக்கம், வேலையின்மை, மாசுபாடு மற்றும் ஊழல் ஆகியவை டெல்லியில் நிலவி வருகின்றன என குற்றம்சாட்டினார்.

மேலும் டெல்லியை தொடச்சியாக 3 முறை ஆட்சி செய்த ஷீலா தீட்சித்தின் அரசாங்கத்தைப் போல், தற்போது டெல்லிக்கு உண்மையான வளர்ச்சி தேவைப்படுகிறது என்றும்  மோடி மற்றும் கெஜ்ரிவாலின் போலியான பிரசாரங்கள் மக்களுக்கு தேவையில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi needs real development; Not fake propaganda Rahul Gandhi Review 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->