மொழியை கற்றுக்கொள் என்று சொல்வது மொழி திணிப்பு அல்ல - தமிழிசை சௌந்தரராஜன்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் சார்பில் தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாவது, 

"முதலில் மொழியை வைத்து அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, அவரவர்களுக்கு என்ன மொழி தேவையோ அந்த மொழியை கற்றுக் கொள்வதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு தர வேண்டும். 

வேறொரு மொழியை கற்றுக் கொள் என்று சொன்ன உடனேயே அதை மொழி திணிப்பு என்று அனைவரும் தவறாக கருதுகிறார்கள். இது திணிப்பு அல்ல. இனிப்பான தமிழை அனைவரும் கற்க வேண்டும்.

நம் தமிழை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக, மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது என்னுடைய கருத்து" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi neru university thamizhisai soundarrajan press meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->