கடும் குளிர், ரெட் அலெர்ட் எதிரொலி | 3 மாநிலங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 15ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வித்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜனவரி 14ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீகார் மாநிலம், பாட்னாவில் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 14 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi school leave snow fall north india red alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->