அனுமதியில்லாமல் சென்றதாக ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி பல்கலை முடிவு.!
delhi university decided notice to ragul gandhi for without permission come
அனுமதியில்லாமல் சென்றதாக ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி பல்கலை முடிவு.!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 5-ந் தேதி, டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்கு திடீரென சென்று அங்கு மாணவர்களுடன் உரையாடினார். பின்னர் அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த திடீர் பயணத்திற்கு டெல்லி பல்கலைக்கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பதிவாளர் விகாஸ் குப்தா தெரிவித்தாவது:- "ராகுல்காந்தி, அனுமதி இல்லாத பயணமாக வந்துள்ளார்.
அவர் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். இது எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. இனிமேல் அனுமதியற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்.
இதுபோன்ற பயணம், மாணவர்களின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும். மாணவர்களுடன் உரையாட உரிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த பதிவுக்கு காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு, "யாருடைய கட்டாயத்தினாலோ டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம், ராகுல்காந்தியை கண்டிக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பல்கலைக்கழக பதிவாளர், ''ஒரு கட்டாயமும் இல்லை. இது ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம்'' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
delhi university decided notice to ragul gandhi for without permission come