முடிமாற்று அறுவை சிகிச்சை.. உடல் அழுகி.. இறந்து போன இளைஞர்.! தவிப்பில் தாய்.!  - Seithipunal
Seithipunal


டெல்லி பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆதர் ரஷீத் என்ற இளைஞர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு தலை முடி கொட்டும் பிரச்சனை இருந்த காரணத்தால் முடிமாற்றும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தார். 

மருத்துவமனையின் விளம்பரத்தை கண்டு முடிமாற்று சிகிச்சைக்காக சென்று ரஷீத் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின், அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே காயங்கள் ஏற்பட்டு ஆறாமல் அழுகி ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்துள்ளது. 

தொடர்ந்து அவரது சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. பின், படிப்படியாக ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழக்க துவங்கியது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷீத் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டார். 

அவரது தாயார் காவல் நிலையத்திற்கு சென்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டு அறுவை சிகிச்சை செய்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi young man died in hair transplant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->