எக்ஸ் தளத்திற்கு இனி Hashtag தேவையே இல்லை - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். பின்னர் டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். 

வீடியோ/ஆடியோ அழைப்புகள், AI சாட்போட் gork உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேங் இடுகைகள் தேவையில்லாதது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிடும் பதிவுகளில் அது தொடர்புடைய ஹேஸ்டேக்குகளை இடுவதும், அது டிரண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது, மேலும் இந்தக் குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம் தலைப்புகள் மற்றும் இடுகைகளை எளிதாகத் தேட முடியும். 

இந்த நிலையில் எலான் மஸ்க் அது தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "இனி சிஸ்டத்துக்கு ஹேஸ்டேக்குகள் தேவையில்லை, அதுமட்டுமில்லாமல் அவை பார்க்க அசிங்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elon musk announce no hastag in x


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->