5705 கோடி ரூபாய்! மோடியின் புதிய அமைச்சரவையில் பெரும் பணக்காரர் இவரா?! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 240 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. 

99 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மக்களவை செல்ல உள்ளது. மேலும் மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக 37 இடங்களில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி இடம் பெற்றுள்ளது.

கடந்த ஜூன் 9 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் 71 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி சார்பில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 99 சதேவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதிலும் 6 அமைச்சர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அந்த தகவலின்படி, 

* மொத்தம் உள்ள 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடியாக உள்ளது. 

* முதல் இடத்தில் தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகியுள்ள சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடியாக உள்ளது.

மேலும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் கொடுத்த தகவலின்படி, பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் உள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Democratic Reforms Association Lok Sabha Elections NDA Alliance Billionaires Ministers 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->