#கேரளா : நர்சை பலாத்காரம் செய்த பல் டாக்டர் சிறையில் அடைப்பு...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் நர்சை பாலியல் பலாத்காரம் செய்த பல் மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் முகமது ஷகாப்(49). இவரது பெற்றோர் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்ததால் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக முகமது ஷகாப், 28 வயதான ஹோம் நர்ஸ் ஒருவரை நியமித்தார். இதையடுத்து அந்தப் பெண் இவரது வீட்டில் தங்கி பெற்றோரை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று முகமது ஷகாப், வீட்டில் தனியாக இருந்த நர்சை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு போலீசார் முகமது ஷகாப் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த முகமது ஷகாப், வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று வெளிநாடு இருந்த திரும்பிய முகமது ஷகாப்பை போலீசார் கொச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து போலீசார் முகமது ஷகாப்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dentist arrested for raped a nurse in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->