பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கணும் - துணை முதல்வர் உதயநிதி..!
deputy chief minister uthayanithi stalin speech about dravidam
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்தும் இலக்கிய விழா நடைபெற்றது. இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
"நீட் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இது சமஸ்கிருதம் மற்றும் சமத்துவத்திற்கும் ஏழை, எளிய மக்களின் நலனிற்கும் எதிராக இருந்தது. தமிழகத்தில் திராவிட இயக்கம் தான் பகுத்தறிவை வளர்த்தது.
அதுமட்டுமல்லாமல், முற்போக்கு அறிவியல் கருத்துகளை வளர்த்ததும் திராவிட இயக்கம். இந்தி திணிப்பை எதிர்த்தது திராவிட இயக்கங்கள் தான்.
தமிழகத்தை சேர்ந்த பெரியார் தான் கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தவர்" என்று தெரிவித்தார்.
English Summary
deputy chief minister uthayanithi stalin speech about dravidam