மக்களே உஷார்!....மேலடுக்கு சுழற்சியால் மிக கனமழை எச்சரிக்கை!...முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? - Seithipunal
Seithipunal


சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர்  ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதாகவும், இதுவரை சராசரி மழையளவை விட 6 சதவீத அதிக மழைப்பொழிவை தமிழ்நாடு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாகவும், ராமேஸ்வரத்தில் 43.8 செ.மீ, தங்கச்சிமடத்தில் 33.8 செ.மீ பாம்பன் பகுதியில் 28 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் கனமழையினை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 ஜே.சி.பிக்களும், 47 மோட்டார் பம்புகளும், 111 படகுகளும், 63 மரம் அறுக்கும் எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை  நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதே போல், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும் தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People beware very heavy rain warning due to upper circulation what are the precautionary measures


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->