தி.மு.க.வின் லட்சணம் இதுதான்!...முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீது ஓபிஎஸ் கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி லட்சணம் இதுதான் என்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 343-ல், "கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிர் இழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி லட்சணம் இதுதான்!

மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற இந்த நேரத்திலாவது, அவருக்குரிய 25 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இதர முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலையினை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dmk vision is this ops hard attack on chief minister mk stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->