விடுமுறை அளித்தும் நனைந்தபடி சென்ற மாணவர்கள் - தாமதம் ஏன்? - துணை முதல்வர் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்தது. அதிலும் சென்னையில் கே.கே.நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், கிண்டி, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது. 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை 10 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்திருந்தார். ஆனால் மேலும் மழை தீவிரமடைந்ததை அடுத்து காலை சுமார் 7.15 மணிக்கு சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

சென்னையில் பெரும்பாலான பள்ளிகள் காலை 7.30 மணிக்கே தொடங்கிவிடும் நிலையில் குழந்தைகள் காலையிலேயே பள்ளிக்குச் சென்றனர். திடீரென விடுமுறை அறிவித்ததால் மழையில் நனைந்தபடியே அவர்கள் திரும்பி வந்தனர். இதனால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். 

இந்த நிலையில் விடுமுறை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதாவது, " சென்னையில் கனமழை பெய்யும் என அறிவித்த நிலையில் மழையே வரவில்லை. நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான் மழை பெய்யத் தொடங்கியது. இதனால்தான் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க முடியாமல் போனது.

இனி வரும் காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் தாமதம் ஏற்படாது. நள்ளிரவுக்கு பிறகே மழை தீவிரமடைந்ததால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்று உதயநிதி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy cm uthayanithi stalin explain late announce school leave in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->