ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
Ranipet West District AIADMK Opens Water Pandal
ராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாலாஜா பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வாலாஜா நகர கழக செயலாளர் WG.மோகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே மக்களுக்கு கட்சி சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு அவர்களுக்கு தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடை வெயில் உக்கிரத்திலிருந்து மக்களை காக்க அதிமுக தொண்டர்கள் மக்களுக்கு நீர் பந்தல் திறந்து அவர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.

அந்தவகையில் ,ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாலாஜா பேருந்து நிலையத்தில் தற்போது கோடை காலம் என்பதால் தமிழகம் முழுவதும் அதிக வெயில் வெப்ப காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா வாலாஜா நகர கழக செயலாளர் WG.மோகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்எம். சுகுமார் கலந்துகொண்டு ரிப்பான் வெட்டி தன்னிர்பந்தலை திறந்து வைத்து எளநீர், மோர், தர்புஸ்,ஜூஸ், மற்றும் பழ வகைகள் வழங்கினார் .
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைந்தங்கி ஏழுமலை, மாவட்ட துணை கழக செயலாளர் வேதகிரி மற்றும் நகர் கவுன்சிலர் WG.முரளி,MC மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
English Summary
Ranipet West District AIADMK Opens Water Pandal