திமுக ஆர்ப்பாட்டம் - நிதியமைச்சருக்கு நெத்தியடி கொடுத்த தயாநிதி.!
dhayanithi maran speech about nirmala seetharaman in dmk protest
மத்திய பட்ஜெட் 2024இல் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஏராளமான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”கடந்தாண்டு தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
அப்போது, நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வந்தார். அவங்க ஆட்கள் இருக்கும் கோயில் பகுதிக்கு மட்டும் சென்ற அவரிடம், ஒருவர் கோயில் கட்டுமானம் பற்றி தெரிவித்தார்.
அந்த சமயம் ஒருவர் கோயில் உண்டியலில் பணம் போட வந்தார்.
அவரிடம், ‘கோயில் உண்டியலில் காசு போடாதீங்க. அது மாநில அரசுக்கு சென்றுவிடும். அர்ச்சகர் தட்டில் தட்சணை போடுங்க’ என்று கூறினார். ”அதே போல நாங்களும் தமிழக மக்களிடம் நீ வரி கட்டாதே, வரி கட்டினால் நம்ம பணம் டெல்லிக்கு சென்றுவிடும் என்று கூறலாமா.? அது எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் பார்த்தீர்களா.? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், மக்களின் வலி அவருக்கு தெரியாது” என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
dhayanithi maran speech about nirmala seetharaman in dmk protest