விக்ரம் லேண்டர் தரையிறங்கிய மகிழ்ச்சி.! ஆட்டத்துடன் கொண்டாடிய தோனி மகள் - வீடியோ வைரல்.! - Seithipunal
Seithipunal


விக்ரம் லேண்டர் தரையிறங்கிய மகிழ்ச்சி.! ஆட்டத்துடன் கொண்டாடிய தோனி மகள் - வீடியோ வைரல்.!

கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று நிலவின் பரப்பில் தரையிறங்கும் சாகசகம் வெற்றிகரமாக அரங்கேறியது. விக்ரம் லேண்டர் தரையிறங்கியது மூலமாக சந்திரயான் திட்டத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. 

இந்தத் தரையிறங்கும் காட்சியை தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அனைத்து இந்தியர்களும் பார்த்து கைதட்டி ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். அந்த வகையில், கிரிக்கெட் வீரர் ’தல’ தோனியின் மகள் மகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

சந்திரயான் திட்டம் குறித்து விளங்கிக்கொள்ள முடியாத போதும் 7 வயது சிறுமியான ஷிவா, தேசத்தின் பெருமைமிகு தருணத்தை கொண்டாடிய விதமும், குதியாளம் போட்டு தனது மகிழ்வை வெளிப்படுத்தியதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

 சிறுமி ஷிவா மகிழ்சியில் கைதட்டி ஆட்டம் போட்டதை, அவரது தாயார் சாக்‌ஷி தோனி பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் இந்தியர்கள், நாட்டின் மற்றுமொரு பெருமைமிகு அடையாளமான ’தல’ தோனியின் சார்பில், அவரது அன்பு மகள் வீடியோவை வலைத்தளங்களில் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni daughter celebrate chandrayan 3 vikram lander landing vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->