#கேரளா: தெருநாய் கடித்து குதறியதில் 11 வயது மாற்று திறனாளி சிறுவன் பலி..!
differently abled boy dies after being bitten by a stray dog in kerala
கேரளாவில் தெரு நாய் கடித்த குதறியதில் மாற்று திறனாளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் முழப்பிலாங்காடு பகுதியை சேர்ந்தவர் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் நிஹால் நிஷாத். இவர் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக சென்றுள்ளார். ஆனால் சிறுவன் நீண்ட நேரமாகியும் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிறுவனை தேடினர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சாலையோரம் பலத்த காயமடைந்த நிலையில் சிறுவன் மயங்கி கிடந்துள்ளான். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனை தெருநாய்கள் பயங்கரமாக கடித்து இருப்பதாகவும், கழுத்து இதயம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெரு நாய்கள் கடித்து குதறியதில் இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்தனர். மேலும் இதுபோன்று சிறியவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலரையும் தெரு நாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றத குறிப்பிடத்தக்கது.
English Summary
differently abled boy dies after being bitten by a stray dog in kerala