டிஜிட்டல் பரிவர்த்தனை தரவரிசை பட்டியல் இந்தியா முதலிடம் பிடித்து அசத்தல்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன.

அந்த வகையில் தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் பொதுமக்கள் செல்போன் செயல்களின் மூலம் அனைத்து சேவைகளையும் பெறுகின்றனர். பணப்பரிமாற்றம், ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இதன் மூலம் செய்கின்றனர்.

அந்த வகையில் பண பரிமாற்றத்திற்கு கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றத்தில் சில நேரங்களில் நிறைய குளறுபடிகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் உலகளவில் 2022 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு ட்விட்டர் பதிவில், உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் 46 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் 2.92 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனையுடன் பிரேசில் உள்ளது. 1.76 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனையுடன் சீனா 3ம் இடத்திலும், 1.65 கோடி டிஜிட்டல் பணபரிவர்த்தனையுடன் தாய்லாந்து 4ம் இடத்திலும், 80 லட்சம் டிஜிட்டல் பணபரிவர்த்தனையுடன் தென் கொரியா 5ம் இடத்திலும் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Digital payment india in 1st place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->