என்ன கொடுமை இது!!! கோவிலில் சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் தகராறு...! மூத்த பூசாரியை குத்திய சக பூசாரி....!!!
Dispute over performing aarti Lord temple priest stabs senior priest
ராஜஸ்தானில் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உள்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு 60 வயதான பரசுராம் தாஸ் மகாராஜ் என்பவர் மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாகவுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த நேரம் சிவ்பாலை பரசுராம் முதலில் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் காவலர்களிடம் பிடிபட்டார். அவரை காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு நாசுக்காக அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Dispute over performing aarti Lord temple priest stabs senior priest