சென்னையில் இனி தொழில் செய்தால் இது கட்டாயம்! மாநகராட்சி அறிவிப்பு!
Chennai Corporation new rule for Business
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் செய்யும் அனைவரும் தொழில் உரிமம் பெறுவது அவசியம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023ன் விதி 289(1)ன் படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் தொழில்புரிவோர், மாநகராட்சி ஆணையரிடம் கட்டாயமாக தொழில் உரிமம் பெற வேண்டும். மேலும், விதி 290ன் படி, புதிய தொழில் உரிமங்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் உரிமங்கள் மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாக இருக்கும்.
வணிகர்கள் முன்வைத்த கோரிக்கையின் பேரில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதி 300Aன் அடிப்படையில், தொழில் உரிமத்தை ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு என விருப்பப்படி புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் தங்களது தொழில் உரிமத்தை, chennaicorporation.gov.in இணையதளம், இ-சேவை மையங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், உரிமம் ஆய்வாளர்களின் கையடக்க கருவிகள் மூலம் 31.03.2025க்குள் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
Chennai Corporation new rule for Business