சென்னை: வாங்கிய கடனுக்காக வீட்டை எழுதிக்கேட்டு மிரட்டிய பெண் ரவுடி கைது!
Chennai Woman Rowdy Arrested
சென்னையில் வாங்கிய கடனுக்காக வீட்டை எழுதிக்கேட்டு மிரட்டிய பெண் ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரை சான்றோர் பாளையத்தில் வசிக்கும் ராஜலட்சுமி (37) என்பவர், தனது தம்பி விபத்தில் சிக்கியதால், மருத்துவ செலவுக்காக 2023-ம் ஆண்டு அரும்பாக்கத்தைச் சேர்ந்த லதா என்பவரிடம் ரூ.13 லட்சம் கடனாக பெற்றார். ஆரம்பத்தில் மாதாந்திர வட்டியை சரியாக செலுத்திய அவர், கடந்த சில மாதங்களாக அதனை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், லதா தொடர்ந்து ராஜலட்சுமியின் வீட்டிற்கு சென்று, அவரையும், அவரது தாயாரையும் தாக்கியதுடன், கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதுமாறு அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், லதாவின் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
English Summary
Chennai Woman Rowdy Arrested