விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!
A famous company has acquired the OTT rights of Vijays film Jana Nayagan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். பாக்ஸ் ஆபீஸ் கிங். இவருடைய இறுதி படமான விஜய் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் படும் வைரலானது.
அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் 'ஜனநாயகன்' உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 'ஜனநாயகன்' படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. அத்துடன், வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் ரூ.78 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.
தற்போது விஜய் தமிழக வெற்றிக் கழகம் என கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியலில் ஈடுப்பட்டு கொண்டிருக்கிறார். அவரின் கடைசி படம் என்பதால் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்கு 'ஜன நாயகன்' படத்தின் உரிமையை கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
A famous company has acquired the OTT rights of Vijays film Jana Nayagan