பெரும்பாலான விவாகரத்துக்கள் காதல் திருமணங்களில் தான் நடக்கின்றன - உச்ச நீதிமன்றம்.!
Divorce cases are love marriage supreme court
பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்கள்தான் ஏற்படுகின்றன உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமிக்க நமது நாட்டில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை கொண்டது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அல்லது ஒவ்வொரு பகுதிகளுக்கும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
இதில் திருமணங்கள் அனைத்து மதம் மற்றும் ஜாதி உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களிடையே நடக்கும் ஒற்றுமையான நிகழ்வாகும். இதில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்கும் விதமாக தற்போது காதல் திருமணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆனால் அதே வேலையில் தற்போது நீதிமன்றங்களின் விவாகரத்துகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி பி.ஆர்.காவாய் அடங்கிய அமர்வில் ஒரே வழக்கில் வழக்கறிஞர் இந்த திருமணம் காதல் திருமணம் என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அப்போது பேசிய நீதிபதி காவாய் தற்போது நடைபெறும் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை காதல் திருமணங்களில் தான் நடக்கின்றன என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
English Summary
Divorce cases are love marriage supreme court