தமிழ்நாட்டின் நலனுக்காகவே மேகதாது அணை.!! டி.கே சிவக்குமார் புது விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் பங்கை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். அதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் தமிழக அரசு அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினர். இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் காவிரி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கர்நாடக விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்து மீதம் இருக்கும் நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என தெரிவித்து சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 113 பக்கங்கள் கொண்ட விரிவான மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாடு அரசு சார்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம், மத்திய ஆணையங்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவு உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கர்நாடக அரசு காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் திறந்து விட்டிருக்க வேண்டிய 28.8 டிஎம்சி நிலுவை தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த வழக்கு கூடிய விரைவில் பட்டியலிடப்பட்ட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவானது படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் "தற்போது வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை வேண்டாம், போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும்.

கடந்த வருடம் காவிரியில் திறக்கப்பட்ட 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்று வீணானது. இதுவே மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்க முடியும். உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள். தற்போது தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது" என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DKSivakumar said that Karnataka build meghadatu dam for TN benefit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->