நாட்டு மக்களுக்கு அமைதி மற்றும் செழிப்பு நிரம்ப வேண்டும் - திரவுபதி முர்மு மாநிலங்கள் உருவான தின வாழ்த்து!
Peace and prosperity to the people of the nation happy birthday of draupadi murmu states
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் அதனை நினைவு கூர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு மாநிலங்கள் உருவான தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு மக்களுக்கு மாநிலங்கள் உருவான தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் தொடர்ந்து பங்களிக்கவும், அவர்களின் வாழ்க்கை அமைதி மற்றும் செழிப்புடன் நிரம்பவும் வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Peace and prosperity to the people of the nation happy birthday of draupadi murmu states