அரசியலில் பரபரப்பு!...ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த முக்கிய பாஜக நிர்வாகி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை முன்னிறுத்துவது, கட்சி தாவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் டெல்லி சட்டர்பூர் தொகுதி பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த பிரம் சிங் தன்வார் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

கட்சித் தாவல் சம்பவம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது, சட்டர்பூர் மற்றும் மெகருல்லி தொகுதிகளில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பிரம் சிங் தன்வார் தங்கள் கட்சியில் இணைந்ததன் தங்களுக்கு கூடுதல் பலம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A sensation in politics amajor bjp executive who joined the aam aadmi party


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->