ரகசிய தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர வேண்டும்- மத்திய அரசு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இதன் மூலமாக பண பரிமாற்றம், முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவைகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரகசியமான தகவல் மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரசு அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலெக்சா, சிரி போன்ற டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால், செயலிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப் படுவதால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't share govt secret on social media apps


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->