கர்நாடக அரசு பெண் அதிகாரி கொலை வழக்கில் ஓட்டுநர் கைது.!!
Driver arrested in Karnataka govt woman officer prathima murder case
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரதிமா சுங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் அவர் சுப்பிரமணியபோரா என்ற பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு அலுவலகம் முடிந்து பெங்களூரில் இருக்கும் சுப்பிரமணியபோராவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவருடைய கணவரும் மகனும் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில் சனிக்கிழமை இரவு பிரதிமாவின் சகோதரரும், கனவரும் செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால் அவர் தனது செல்போனை எடுக்காததால் அவரது சகோதரர் மறுநாள் காலை பிரதிமாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது பிரதிமா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பிரதிமா அலுவலகத்திலிருந்து 6 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு வீட்டுக்கு வந்த நிலையில் அவரது வீட்டில் புதிய ஓட்டுநராக இணைந்தவர் இது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தினர். மேலும் பழைய ஓட்டுனர் குறித்தும் விசாரிக்க தொடங்கினர்.
இதில் காவல்துறையினர் பழைய ஓட்டுனர் கிரணியிடம் விசாரிக்க தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து கிரணியை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒப்பந்த அடிப்படையில் 5 நாட்கள் மட்டுமே அவரிடம் ஓட்டுனராக பணியாற்றிய இவரை பணியில் இருந்து நீக்கி உள்ளார் பிரதிமா.
மீண்டும் தனக்கு வேலை வழங்கும்படி அவரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த பிரதிமா புதிய ஓட்டுநரை நியமித்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்த முன்னால் ஓட்டுநர் கிரணி கடந்த சனிக்கிழமை இரவு அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Driver arrested in Karnataka govt woman officer prathima murder case