ஆசிரியை ரமணியை கொலை செய்தது ஏன்?...கொலை செய்தவர் பரபரப்பு வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ரமணி என்பவர், நடப்பு மாதம் 20-ம் தேதி வழக்கம்போல்  வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  அப்போது, திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த ஒருவர் ஆசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இதில் நிலைகுலைந்து போன ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதையடுத்து ஆசிரியை  குத்திக் கொலை செய்த சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மதன்குமார் வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி,
ரமணியும் நானும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,  எங்களது திருமணத்திற்கு  ரமணியின் பெற்றோர், எனது மகள் ஆசிரியராக உள்ளதால், மீன்பிடித் தொழில் செய்பவருக்கு எங்கள் மகளை தர விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து நான் ரமணியிடம் பேசி நமது திருமணத்திற்கு உனது பெற்றோரை சம்மதிக்க சொல் என்று கூறினேன் என்றும், அவர் என்னுடன் பேசுவதை தவிர்த்தார். மேலும், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் புரிந்து கொள்ளாததால் அவர் வேலை செய்யும் பள்ளிக்கு சென்று 'நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், ரமணி உன்னை திருமணம் செய்ய முடியாது என்றும், நீ இங்கிருந்து போய் விடு என்று விரட்டி, திருமணத்துக்கு மறுத்ததால் கத்தியை எடுத்து கழுத்தில் குத்திக்கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why did you kill the teacher ramani the murderer made a sensational confession


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->