போதைப் பொருள் கடத்தல்..இரண்டு வாலிபருக்கு கைவிலங்கு! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் நடத்திய கூட்டு சோதனையில் சந்தேகிக்கப்படும் இருவரிடம் இருந்து 5.50 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் போதைப்பொருளுக்கு  எதிரான நடவடிக்கையில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர் .தமிழகத்திலும் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது .இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடுக்கு அருகே உள்ள நவ்ஷேரா செக்டார் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் நடத்திய கூட்டு சோதனையில் சந்தேகிக்கப்படும் இருவரிடம் இருந்து 5.50 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சஜன் குமார் (25) மற்றும் சுபாஷ் சந்தர் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜம்முவின் அர்னியா செக்டரில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் டிரோன் மற்றும் அரை கிலோ எடையுள்ள போதைப்பொருட்களை எல்லை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.நவ்ஷேரா செக்டார் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் நடத்திய கூட்டு சோதனையில் சந்தேகிக்கப்படும் இருவரிடம் இருந்து 5.50 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drug trafficking Handcuffs for two young men


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->