மதுபோதையில் மின்கம்பத்தில் படுத்துறங்கிய வாலிபர் - ஆந்திராவில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் வாலிபர் ஒருவர் மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மது அருந்திய நபர், போதையில் தள்ளாடியபடி வந்துள்ளார். பின்னர், வீட்டின் அருகில் இருக்கும் மின் கம்பத்தின் மீது ஏறி படுத்து உறங்கி இருக்கிறார்.

இதைப்பார்த்து அதிர்ந்துபோன உள்ளூர் மக்கள் அவரை கீழே இறங்க வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர் கீழே இறங்காததால் அப்பகுதியில் சற்று நேரம் மின்சாரத்தை நிறுத்தி வைத்தனர்.

நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு அந்த நபரை கீழே இறக்கிய மக்கள் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே போதை ஆசாமி மின்கம்பத்தில் படுத்து உறங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drunken man sleep electric tree in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->