துபாயின் பட்டத்து இளவரசர் நாளை இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்..!
Dubai Crown Prince to visit India tomorrow will meet Prime Minister Modi
அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தீன் பின் முகமது அல் மக்டோம் நாளை இந்தியா வருகிறார். துபாய் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றப்பின் ஷேக் ஹம்தீன் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதம மஅமைச்சராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், செயல்பட்டு வருகிறார்.
02 நாள் பயணமாக இந்த வரும் இவர் பிரதமர் மோடியை சந்திக்க்கவுள்ளார். குறித்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். இதையடுத்து, இளவரசர் அல் மக்டோமிற்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை துபாய் இளவரசரர் சந்திக்கவுள்ளார். இதன்போது ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையேயான உறவு, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
அத்துடன், நாளை மறுதினம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்கள் கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திலும் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தீன் பின் முகமது அல் மக்டோம் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Dubai Crown Prince to visit India tomorrow will meet Prime Minister Modi