இ- சிகரெட் தடையை மீறினால் நடவடிக்கை: எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!  - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு மின்னணு சிகரெட் தடைசெய் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்வது, ஏற்றுமதி, இறக்குமதி செய்வது, விளம்பரம், விற்பனை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. 

இ-சிகரெட்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு இடையே இ-சிகரெட் தடை சட்டத்தில் சிறை தண்டனை, அபராதம் போன்ற விதிமுறைகளை மீறி புழக்கத்தில் இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. 

அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதனை பயன்படுத்துவது மத்திய அரசுக்கு மேலும் கவலையை உண்டாக்குகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இ-சிகரெட் எந்த வடிவிலும் எந்த முறையிலும் வைத்திருப்பது சிகரெட் தடை சட்டத்தை மீறிய குற்றம் என தெளிவுபடுத்தியுள்ளது. 

இந்த தகவல் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றம் தான் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

மேலும் இந்த தடையை மீறுபவர்கள் குறித்து புகார் அளிக்க ஒரு இணையதளத்தையும் சுகாதாரத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

E Cigarette is crime central government warning


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->