அந்தமானில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
Earthquake in Andaman 6.1 rictor measurement
அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கே இன்று அதிகாலை 2.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கம் 75 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
English Summary
Earthquake in Andaman 6.1 rictor measurement