அந்தமானில் ஏற்பட்ட திடீர் நில நடுக்கம்.. தேசிய புவியியல் ஆய்வு மையம்.!
Earthquake in andhaman rictor measurement 4.6
வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேரில் இருந்து 302 கிலோ மீட்டர் தொலைவிலும், 40 கிலோ மீட்டர் கடலுக்கு அடியில் ஆழத்திலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் அடைந்ததாகவோ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Earthquake in andhaman rictor measurement 4.6