சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக போராட்டம் – 500 பேர் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பு இன்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கோகுல இந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுகவினர் அனுமதி இல்லாமலேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், போலிசாருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உட்பட 500 அதிமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK protest against the rape of a student in Anna University Chennai 500 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->