அம்பேத்கர் மீது திமுகவுக்கு மரியாதை இருந்தால் முதல்ல இதை செய்யுங்க - சவால் விட்ட டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


அம்பேத்கர் மீது திமுகவுக்கு மரியாதை இருந்தால் அரசின் திட்டங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு திமுக அரசு தயாரா? என்று பாமக தலைவர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைவழிகாட்டி. இந்தியாவிலேயே பட்டியலினத்தவர் அல்லாதவரால் தொடங்கப் பட்ட கட்சிக்கு அண்ணல் அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். 

அவர் மீது கொண்ட மதிப்பால் எங்கள் வீட்டு வளாகத்தில் அவரது உருவச் சிலையை அமைத்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிலைகளை திறந்திருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நான் திறந்தேன். ஆனால், அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளை காப்பதற்காக பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுக அண்ணல் அம்பேத்கருக்காக என்ன செய்தது? 

1949 ஆம் ஆண்டில் திமுக தொடங்கப்பட்டது. அதன்பின் 1989ஆம் ஆண்டில் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இடைப்பட்ட 40 ஆண்டு காலத்தில் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி  திமுக எத்தனை முறை பேசியது. 

இந்தியா முழுவதும் சட்டக் கல்லூரிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டும் வழக்கம் ஏற்பட்ட பிறகு தான் 1990 ஆம் ஆண்டில் சென்னை சட்டக்கல்லூரிக்கும், 1997 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சட்டப்பல்கலைக்கழகத்திற்கும் அம்பேத்கரின் பெயரை  திமுக சூட்டியது. இன்று வரை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்படவில்லை. 

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 40 க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைஞரின் பெயர் மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கு எந்த பங்களிப்பும் செய்யாத அவரது தாயார் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த புதிய திட்டத்திற்கும், கட்டிடங்களுக்கும் அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டப்படவில்லை. 

இது தான் அண்ணலுக்கு செலுத்தும் மரியாதையா? என திமுக அரசு விளக்க வேண்டும். சென்னை கிண்டி மருத்துவ மனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கும், அரசின் திட்டங்களுக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை திமுக அரசு சூட்ட வேண்டும். திமுக அரசு செய்யுமா? என்று மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Ramadoss Condemn to DMK MK Stalin Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->