அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.!
Earthquake in Arunachal Pradesh
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் மேற்கு சியாங்கில் இன்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பாசாரிலிருந்து 52 கிலோமீட்டர் வட-வடமேற்கு தொலைவிலும், புவி மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அச்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 10.59 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
English Summary
Earthquake in Arunachal Pradesh